புதுடெல்லி: நரேந்திர மோடி அரசு அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களவையில் துணை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிவராஜ் சிங் சவுகான், "விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும் என்பதை உங்கள் (அவைத் தலைவர்) மூலம் நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இது மோடி அரசாங்கம். மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இது.