கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியா. சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் விக்கெட்டை கொடுத்தார்.