சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வரவேற்பு போஸ்டரில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் ஒட்டப்பட்டதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சையானது. சந்தான பாரதி புகைப்படம் உள்ள போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என பாஜக நிர்வாகி அருள்மொழி தெரிவித்தார். யாரோ திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி பேட்டி அளித்தார்.
The post அமித் ஷா போஸ்டர் சர்ச்சை: பாஜக மறுப்பு appeared first on Dinakaran.