சென்னை: சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தலைமையில், சென்னை துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதில், மாநிலத் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், சென்னை மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம். எஸ். திரவியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கே.வீ. தங்கபாலு கூறியதாவது:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளித்திருக்கிறோம். அம்பேத்கர் பற்றி தவறாகக் குறை கூறியதைக் கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தியுள்ளோம்.