வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 4 ஆண்டு பதவிக்காலம் வரும் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே நாளில் 78 வயதான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அதிபர் பைடன் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், ‘குவாட் அமைப்பை தொடங்கியது, இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த ஐசிஇடி முன்முயற்சி தொடங்கியது ஆகியவற்றின் மூலம் இந்தியா உடனான உறவு பைடன் பதவிக்காலத்தில் மேம்பட்டது. பைடனின் வெளியுறவு உத்திகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஆழப்படுத்தி அமெரிக்காவை மேலும் பாதுகாப்பானதாக்கியது’ என்பது உள்ளிட்ட பல்வேறு உலக விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
The post அமெரிக்கா அறிக்கை: அதிபர் பைடன் பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவு மேம்பட்டது appeared first on Dinakaran.