சியோல்: தென்கொரியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது. கணினி உட்பட கள பயிற்சிகள் அனைத்தும் மார்ச் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின் போது நேரடி துப்பாக்கி சூடு பயிற்சி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகள் ப்ரீடம் ஷீல்ட் எனப்படும் கூட்டு ராணுவ பயிற்சிக்கு முன்னதாக கடந்த வாரம் இரு நாட்டு படைகளும் நேரடி துப்பாக்கி சூடு பயிற்சில் ஈடுபட்டு இருந்தன. அப்போது தென்கொரியாவின் 2 போர் விமானங்கள் தவறுதலாக குடியிருப்பு பகுதியில் 8 குண்டுகளை வீசியது. இதில் 30 பேர் காயமடைந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதன் காரணமாக துப்பாக்கி சூடும் பயிற்சி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தவறான குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை முடித்து தடுப்பு நடவடிக்கைகளை வகுத்த பின் நேரடி துப்பாக்கி சூடு பயிற்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தென்கொரியா -அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இந்த பயிற்சியை வடகொரியா போர் ஒத்திகையாக கருதி ஏவுகணைகளை வீசியது. தென்கொரிய ராணுவ தலைவர் கூறுகையில்,” ஹ்வாங்கே மாகாணத்தில் இருந்து வடகொரியா ஏவுகணையை ஏவியது. இது கடலில் சென்று விழுந்தது” என்றார்.
The post அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி: பதிலடியாக கடலில் ஏவுகணைகளை வீசிய வடகொரியா appeared first on Dinakaran.