வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் 26 வயது இந்திய மாணவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவி தேஜா ஐதராபாத்தின் சைத்தன்யபுரியில் உள்ள கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர். தனது பட்ட மேற்படிப்புக்காக 2022ல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா, படிப்பை முடித்துவிட்டு அங்கு வேலை தேடிக் கொண்டிருந்தார். ரவி தேஜாவை சுட்டுக் கொன்றது யார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வாஷிங்டன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை: வாஷிங்டன் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.