புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் முதல் கட்டமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.