நியூயார்க்: கலிபோர்னியாவில் சுவாமி நாராயணன் கோவில்மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமெரிக்கா,கலிபோர்னியா மாகாணம், சினோ ஹில்ஸ் பகுதியில்உள்ள சுவாமி நாராயணன் கோயில் பிஏபிஎஸ் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலின் வாயிற்கதவில் தகாத வார்த்தைகளால் கிறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இந்துக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவாமி நாராயணன் கோயில் அறக்கட்டளை அறிக்கையில், “இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள இன்னொரு கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம். அமைதியும் இரக்கமும் நிலவுவதை நமது மனிதநேயமும் நம்பிக்கையும் உறுதிசெய்யும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சாக்ரமான்டோவில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடந்துள்ளது.நியூயார்க் அருகே உள்ள மெல்விலி சுவாமி நாராயணன் கோயிலில் இந்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.அமெரிக்காவில் இதுவரையில் 10 இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டிருப்பதாக வட அமெரிக்க இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சினோ ஹில்ஸ் இந்துக் கோயில் மீதான தாக்குதலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் கண்டித்துள்ளது.
The post அமெரிக்காவில் சுவாமிநாராயணன் கோயில் மீது மர்மநபர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.