வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்-டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆப்பிள் ஐ ஸ்டோர், பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிபராக இன்று பதவியேற்கவுள்ள ட்ரம்ப், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக டிக்-டாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
The post அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய TIK TOK செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது appeared first on Dinakaran.