புதுடெல்லி: அசைவ பால் மற்றும் மரபணு மாற்ற தானிய விவகாரங்களால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும் அமெரிக்க தரப்பில் பிரென்டனும் கடந்த 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.