சென்னை: சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் ஏ. அஷ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடி சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சைவம், வைணவம் குறித்து, பட்டை அணிதல், திருநாமம் அணிதல் உள்ளிட்ட இந்து தர்ம குறியீடுகளை செய்கையாக காண்பித்து, அமைச்சர் பொன்முடி அவதூறாகவும், கொச்சையாகவும் பேசியுள்ளார். வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இரு பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.