கீவ்:உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம், உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவை வலியுறுத்தினார். இதற்காக 50 நாள்கள் கெடு விதித்த டிரம்ப், மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை ரஷ்யா ஏற்று கொண்டாலும், லட்சியங்கள் நிறைவேறும் வரை போர் தொடரும் என பகிரங்கமாக தெரிவித்தது.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை உக்ரைனின் பல பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குல் நடத்தியது. உக்ரைனின் கிராமடோர்ஸ்க் பகுதி மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். 24 பேர் காயமடைந்தனர்.
The post அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் முன் உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: குழந்தை பலியான சோகம் appeared first on Dinakaran.