1948 பிப்ரவரி 24-ல் ஜெயராம் – வேதவல்லி தம்பதிக்கு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் பெங்களூர் சென்றது. வேதவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தபோது, அவர் சந்தியாவானார்.
பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார் ஜெயலலிதா. பரதம், குச்சிபுடி, மணிப்புரி, கதக் எனப் பெரும்பாலான இந்திய நடனங்கள் ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. குடும்பம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, சென்னை சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.