சென்னை: தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்பட முடியாது என்று என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழகத்தில் பல்ேவறு இடங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடியில் ‘இன்வென்டிவ்-2025’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளையும்(28ம் தேதி), மார்ச் 1ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் திடீர் ரத்து appeared first on Dinakaran.