வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில், அரசின் செலவினத்தை கட்டுப்படுத்தும நடவடிக்கைக்காக அரசு திட்டங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம், கடன் உள்ளிட்ட நிதி உதவிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘நிதி உதவி ரத்து செய்யப்பட்டது கூட்டாட்சி சட்டத்தை மீறும் செயல்’’ என்றனர். இதைக் கேட்ட நீதிபதி அலிகான், அரசு நிதி வழங்கலை முடக்கிய அதிபர் டிரம்பின் உத்தரவு மீது இடைக்கால தடைவிதித்துள்ளார். அதிபரின் நிர்வாக முடிவுகளை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது, அதற்கு தடை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரசு நிதி வழங்கலை முடக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.