கென்யாவில் தேசிய அளவில் நடைபெற இருந்த நாடகப் போட்டி ஒன்றில் வன்முறை வெடித்தது. அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்ட நாடகம் என்பதால் ஆரம்பத்திலேயே அந்த நாடகம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அந்த நாடகத்தை அரங்கேற்ற வந்த போது, அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவிகள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது புகை குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.