மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த வெளிநாட்டு ஆர்வலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் (53) என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பின் மாடுபிடி வீரராக களமிறங்க முடிவு செய்தார்.இதற்காகவே அவர் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். மாடு வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டார்.