துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.