புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் தற்போது டி20 திறமையாளர்களின் தொழிற்சாலையாக உள்ளது. குறைந்தது 30 வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்த வகையில் ஒரு இடத்துக்கு மூன்று முதல் நான்கு வீரர்கள் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளனர்.