புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 29-ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 31-ம் தேதி ஜப்பானுடனும், செப்டம்பர் 1-ம் தேதி கஜகஸ்தானுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.