புதுடெல்லி: ஆசியாவில் பணி செய்ய சிறந்த இடம் தொடர்பான பட்டியலில், 48 பெரிய நிறுவனங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நிறுவனங்கள் – ஊழியர்களின் பணி கலாச்சாரம், நம்பிக்கை, திறமை, புதுமையான யோசனைகள் போன்றவற்றை ஆய்வு செய்து பணி செய்வதற்கு சிறந்த இடம் என்ற பட்டியலை வெளியிடுகிறது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவின் ஆக்லாந்திலும், இந்தியாவின் தலைமை அலுவலகம் மும்பையிலும் உள்ளது.