கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் முன்னணி டெக் நிறுவனமாக கூகுள் அறியப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்னர் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. கடந்த ஆண்டு கூட ஆயிரக்கணக்கான (சுமார் 12,000 பேர்) ஊழியர்களை பணியிலிருந்து கூகுள் நீக்கி இருந்தது.