சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 798 இனங்களை சேர்ந்த 7.84 லட்சம் பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பறவைகள், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை கடைபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமாகும். எனவே, பறவை இனப்பன்மையை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், தமிழக அரசு மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.