அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட வக்பு வாரியம் கலைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 30-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ‘ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 11 உறுப்பினர்கள் அடங்கிய வக்பு வாரிய குழுவை அப்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைத்தது. இதுதொடர்பாக, முந்தைய அரசால் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட அரசாணை திரும்ப பெறப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.