*குன்னூரில் அதிர்ச்சி சம்பவம்
குன்னூர் : குன்னூரில் ஆன்லைனில் டிரிம்மிங் மெஷின் ஆர்டர் செய்த வியாபாரிக்கு பார்சலில் ஜல்லி கற்கள் வந்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் தொடங்கி, வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனத்திடம் டிரிம்மிங் மெஷின் ஆர்டர் செய்துள்ளார். அந்த பார்சல் நேற்று மாலை அவரது கைக்கு கிடைத்துள்ளது. அதில் உள்ளே பொருள் இல்லாததுபோல இருந்ததை அறிந்த அவர், டெலிவரி செய்தவர் முன்பே அந்த பார்சலை பிரித்தார்.
அப்போது உள்ளே ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு காஜா மட்டுமின்றி அந்த நிறுவனத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் நபரும் அதிர்ச்சி அடைந்தார். அந்த டெலிவரி செய்த இளைஞரை, இது குறித்து கேட்டபோது, பதில் ஏதும் கூற முடியாமல் அங்கிருந்து நழுவி சென்று விட்டார். தற்போது இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை வருகிறது.
The post ஆன்லைனில் டிரிம்மிங் மெஷின் ஆர்டர் செய்த வியாபாரிக்கு பார்சலில் வந்த ஜல்லி கற்கள் appeared first on Dinakaran.