புதுடெல்லி: கடந்த புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இது எப்படி நடத்தப்பட்டது என்று குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இப்போதைய நிலையில் ராணுவ நடவடிக்கையின் முழுமையான விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தி உள்ளார். எனினும் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து பாதுகாப்பு துறை சார்ந்த சர்வதேச ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு உள்ளன.