புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், லூதியானா மேற்கு தொகுதியின் எம்எல்ஏ-வுமான குர்பிரீத் பாஸி கோகி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். உரிமம் பெற்ற தனது சொந்த கைத்துப்பாக்கி மூலம் தற்செயலாக சுட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் (டிசிபி) ஜஸ்கரன் சிங் தேஜா, "அவர் தற்செயலாக தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். டிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குர்பிரீத் கோகி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.