புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவையே சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, தேசிய தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.