மற்றொருவர் படுகாயம்
ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே ஆட்டோ டயர் வெடித்து ரோட்டோரம் நின்றவர்கள் மீது மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சோலைசேரி காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் தங்கஜெபராஜ் (66). விவசாயியான இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் விளைந்த புடலங்காயைப் பறித்து தனது பயணிகள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆலங்குளம்காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தார். ஆலங்குளம் நேருஜி நகருக்கு வடபுறம் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் பின் பக்க டயர் வெடித்தது.
இதனால் ஆட்டோ அவரது கட்டுபாட் டை மீறி ரோட்டோரம் மொபட்டில் நின்றவாறு அய்யனார்குளத்தை சேர்ந்த சங்கரபாண்டி (60) என்பவர் ஆலங்குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பிரமணி என்பவரிடம் பேசி கொண்டிருந்தவர்கள்மீது மோதியதோடு அருகேயுள்ள பள்ளத்தில் இருந்த தென்னைமரத்திலும் மோதி நின்றது.
இந்த விபத்தில் சங்கரபாண்டியும், சுப்பிரமணியும் மொபட்டோடு பள்ளத்தில் விழுந்து படுகாயமடை ந்தனர். தகவலறிந்து வந்த ஆலங்குளம் எஸ்ஐ ஆசிர் ஜெபக்குமார், ஏட்டு கணேசமூர்த்தி ஆகியோர் இருவரையும் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சங்கர பாண்டி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சுப்பிரமணி நெல்லை அரசு மருத்துவகல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த தங்க ஜெபராஜ் புடலங்காயை ஏற்றிக் கொண்டு ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு புறப்பட்ட போது அவரோடு அவரது பேரன் ஆகாஷ் (12),பேத்தி குண (10) ஆகியோர் ஆட்டோவில் புறப்பட்டு வந்தவர்கள் அதிர்ஷ்டவச மாக காயமின்றி தப்பியது குறிப்பிடத்தக்கது.
The post ஆலங்குளம் அருகே திடீரென டயர் வெடிப்பால் ஆட்டோ மோதியதில் முதியவர் பலி appeared first on Dinakaran.