புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.