கான்பெர்ரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவாக நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பறிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் நாளை (30-ம் தேதி) கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி கான்பெர்ரா சென்ற இந்திய அணி வீரர்கள் நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா தனது அணி வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.