சென்னை: “மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாரட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்திருக்கிறார். இதில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,329 கிராமங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6,100 கி.மீ. கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி.