ஐபிஎல் முடிந்த கையோடு இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. ஆஸ்திரேலியாவில் பட்ட உதைகளைக் கணக்கில் கொண்டு சில பல மாற்றங்களைச் செய்து வருகிறது. முதற்படியாக உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் கோச் திலிப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் கோச் சோஹாம் தேசாயும் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.
கவுதம் கம்பீருடன் அபிஷேக் நாயர் இணைந்தார். ஆனால் ராகுல் திராவிட் காலத்திலிருந்தே திலிப் இருந்தார். சோஹாம் தேசாய்க்கு பதிலாக பழைய ஃபிட்னெஸ் கோச் அட்ரியன் லீ ரோவ் அழைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் தோல்வி கண்ட பிறகே சிதான்ஷு கோடக் என்பவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளனர். இதில் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு விசித்திரமாகவும் உள்ளதாக ஊடகங்கள் பல தெரிவிக்கின்றன.