பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த பாரத் பூஷன் தன் மனைவி சுஜாதா மற்றும் 3 வயது மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பாரத் பூஷன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்த சம்பவத்தை விவரிக்கையில், ‘‘ராணுவ உடையில் இருந்த தீவிரவாதிகள் என் கணவரை சூழ்ந்துகொண்டனர். அவரை சுட்டுக்கொல்வதற்கு முன் நீ இந்துவா?’’ என கேட்டனர். அதற்கு அவர், ‘‘இல்லை’’என்றதும் சுட்டுக் கொன்றனர். என்னையும் குழந்தையையும் அவர்கள் சுடவில்லை’’ என்றார்.
ஷிமோகாவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராம் (48) பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி பல்லவி கூறுகையில், ‘‘என் மகன் அபிஜேயா (18) 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததால், அதனை கொண்டாடுவதற்காக காஷ்மீர் வந்தோம்.