மதுராந்தகம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் என க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான க.சுந்தர் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நாளை (12ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, 48 கழக தோழர்களுக்கு நூற்றாண்டு நாணயம் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, 200 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்க வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவாகிய நான் தலைமை தாங்குகிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அனைவரையும் வரவேற்க உள்ளார். மாவட்ட அவை தலைவர் இனியரசு, துணை செயலாளர் கோகுலக்கண்ணன், மலர்விழிக்குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், இளைஞர் அணி நிர்வாகிகள் மணி, பால்ராஜ், சஞ்சய் காந்தி, அருள் முருகன், ஆண்டோ சிரில்ராஜ், யுவராஜ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.ஏழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நாகன், நாராயணன், ஆர்.டி.அரசு குமார், தமிழ்ச்செல்வன், கண்ணன், தம்பு, ஞானசேகரன், சத்திய சாய், சிவக்குமார், ராமச்சந்திரன், பாபு, ஏழுமலை, சிற்றரசு, சரவணன், குமணன், சேகர், மோகன்தாஸ்,
எழிலரசன், சுந்தரமூர்த்தி, பாரிவள்ளல், பாண்டியன், வெளிக்காடு ஏழுமலை, சம்யுக்தா அய்யனார், ரஞ்சித், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் குணா மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் நன்றி கூறுகிறார். எனவே இவ்விழாவில் திமுக முன்னணியினர் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமான கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு க.சுந்தர் எம்எல்ஏ கூறியுள்ளார்.
The post இடைக்கழிநாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு: எம்எல்ஏ சுந்தர் தகவல் appeared first on Dinakaran.