கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தலா ஒரு சட்டசபை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ‛‛இது எனது ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே, சத்தீஸ்கார் மாநிலம் கைராகர், பீகார் மாநிலம் போச்சான், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கும், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த 5 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி கட்சியும், மகாராஷ்டிரா, சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் முன்னிலையில் இருந்தனர்.
இன்று ஓட்டு எண்ணிக்கை
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் 64.03 சதவீதம் ஓட்டுக்களும், பாலிகங்கே சட்டசபை தொகுதியில் 43 சதவீத ஓட்டுக்களும் பதிவாகி இருந்தது. இந்த தொகுதியில் இன்று காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியபோதே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தொடங்கினர்.
நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி
ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் மேற்கு வங்கத்தின் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் பாஜகவின் வேட்பாளர் அக்னி மித்ரா தோல்வியடைந்தார்.
வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹா
பாஜகவில் இருந்து சமீபத்தில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி பாலிகங்கே சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சுப்ரியா வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவர் 50,996 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளார். 2வது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாய்ரா ஷா 30 ஆயிரத்து 5940 ஒட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜகவின் கோயா கோஷ் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 13,174 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளார்.
சட்டசபை தொகுதியில் வெற்றி
இதேபோல் மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பாபுல் சுப்ரியா வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 50,996 ஓட்டுகள் பெற்று 20ஆயிரத்து 56 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிம் 30,940 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். பாஜக வேட்பாளர் கேயா கோஷ் 13,174 ஓட்டுகளுடன் 4ம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் கம்ருஷாமன் சவுத்ரி 5,205 ஓட்டுக்களுடன் 4ம் இடமும் பிடித்தார்.
மம்தா பானர்ஜி நெகிழ்ச்சி
இதனால் மம்தா பானர்ஜி உற்சாகம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛அசன்சோல் மற்றும் பாலிகங்கே தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தந்துள்ள வாக்காளர்களுகு்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது எனது ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகள் எதிரொலிக்கவில்லை
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை பல்வேறு கலவரங்களுக்கு மத்தியில் இடைத்தேர்தல் நடந்தது. மேலும் கடந்த 18 நாளில் மட்டும் 5 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சம்பங்கள் எதுவும் தேர்தலில் எதிரொலிக்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை பல்வேறு கலவரங்கள் மத்தியில் இடைத்தேர்தல் நடந்தது. மேலும் கடந்த 18 நாளில் மட்டும் 5 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சம்பங்கள் எதுவும் தேர்தலில் எதிரொலிக்கவில்லை.