‘இட்லி கடை’ ரொம்ப எமோஷனலான படம் என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் நித்யா மேனன். அதில் அளித்த பேட்டியொன்றில், “’காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு நேர் எதிர்மறையாக ‘இட்லி கடை’ படம் இருக்கும். அப்படத்துக்காக ஆர்வமாக இருக்கிறேன். எதையுமே திட்டமிடாமல் இருக்கும் போது, அது தானாக நடக்கும். அப்படமும் இதே ஆண்டில் வெளியாகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.