தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூகுள் டூடுல்கள் முக்கியத் தலைவர்களை நினைவு கூர, முக்கிய தினங்களை நினைவுகூர, ஏதேனும் நிகழ்வுகளை பாராட்ட வெளியிடப்படும். சில நேரங்களில் கலாச்சாரங்களைக் கொண்டாடவும் வெளியிடப்படும். அந்த வகையில். இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரமான இட்லியைக் கொண்டாடும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். கூகுள் லோகோ முழுவதுமே இட்லி, இட்லி மாவு நிறைந்த பாத்திரம், இட்லிடை வேகவைத்தல், அதற்கு தொட்டுக் கொள்ளப்படும் சட்னி, சாம்பார், இட்லிப் பொடி என அலங்காரமாகக் காட்சியளிக்கிறது. அதுவும் அது வாழை இலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.