மும்பை: இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற ஊகத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது தேசிய பிரச்சினை மற்றும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து அமைந்திருந்தது. மாநிலத் தேர்தல்கள் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.