புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி என்றால் அதை கலைத்து விடலாம்.