
“சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே’ என்று திட்டுகிறார்கள்” தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்.
இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் என்பது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம்” என வாக்குறுதி அளித்தார்.

