
சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.

