சென்னை: இளைஞர்கள் தூதுவர்களாக இருந்து இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக் ஷின பாரத் இந்தி பிரச்சார சபாவின் 83-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சபாவின் தலைவர் வி.முரளிதரன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு தலைவர் எம்.எஸ்.முரளிதரன், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் பிரவீன், விஷாரத் தேர்வுகளில் சுமார் 8 ஆயிரம் பேர் பட்டம் பெற்றனர்.