சென்னை: “இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது. மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்­பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 8-வது கடிதத்தின் விவரம்: “இந்தி நம் நாட்­டின் தேசிய மொழி என்­றும், அதனை யாரும் புறக்­க­ணிக்கக் கூடாது என்­றும் பாஜகவின­ரும், அவர்­க­ளின் கொள்கை வழி அமைப்­பி­ன­ரும் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வர் ஓம் பிர்லா, சமஸ்­கி­ரு­தம்­தான் பார­தத்­தின் மூல­மொழி என்று அவை­யி­லேயே குறிப்­பி­டு­கி­றார். இவை இரண்­டுமே தவ­றான பரப்­பு­ரை­யா­கும்.