புதுடெல்லி: ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிப்.3, 2025 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்திய – சீன எல்லையில் நிலவும் நிலைமை குறித்த ராணுவத் தளபதியின் அறிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ராணுவத் தலைவரின் கருத்துகள், இரு தரப்பினரின் பாரம்பரிய ரோந்துப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிப்பிட்டன. அதேநேரத்தில், சமீபத்திய படைவிலகலின் ஒரு பகுதியாக அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பாரம்பரிய ரோந்து முறை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்துள்ளது.