திண்டுக்கல்: இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து இரண்டு நாள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் வருகை தந்தார். இவரை திண்டுக்கல் ஆட்சியர் வரவேற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, இந்திய தேர்தல் ஆணையர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்தினருடன் இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அம்மையநாயக்கனூர் விருந்தினர் மாளிகையில் இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்துவை சந்தித்து, திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.