நியூயார்க்: அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருபவர் கிரிஷ்லால் இஸர்தசானி. இன்னும் சில வாரங்களில் பட்டப்படிப்பை முடிக்க உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி கிரிஷ்லால் அங்கு உள்ள மதுபான பாரில் சென்று மது குடித்துள்ளார். பாரில் இருந்து வெளியே வந்த கிரிஷ்லால் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு கும்பலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கிரிஷ்லாலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவரது எப்.1 சர்வதேச மாணவர் விசா கடந்த 4ம் தேதி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை திடீரென ரத்து செய்தது. இதனால் அவர் நாடு கடத்தப்படும் சூழல் ஏற்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விஸ்கான்சின் மாவட்ட நீதிபதி வில்லியம் கோன்லி,‘‘ மாணவரின் விசா பதிவு ரத்த செய்யப்படுவதற்கு முன்பு, அவருக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. தன்னிலை விளக்கம் அளிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று கூறி விசா ரத்துக்கு தடை விதித்தார்.
The post இந்திய மாணவர் நாடு கடத்தலுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை appeared first on Dinakaran.