புதுடெல்லி: “சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா திருப்பிய அனுப்பி நாடு கடத்தியபோது அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
சமீபத்திய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், டெல்லியில் உள்ள அக்கட்சியின் புதிய அலுவலகமான இந்திரா பவனில் இன்று சந்தித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கொண்டனர். மேலும், பல்வேறு மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.