புதுடெல்லி: இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் உடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கான வணிகங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளன. அதனை முன்வைத்து மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கோயல் தெரிவித்துள்ளார்.